சிறப்பு காவல்படை முதலணி, காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

0 387
Stalin trichy visit

தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி, காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

இன்று 19.10.22ந்தேதி மாலை தமிழ்நாடு சிறப்பு காவல்படை, முதலணி, திருச்சியில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்விழாவினை தமிழ்நாடு சிறப்பு காவல்படை, முதலணி திரு.ஆ.ஆனந்தன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.காய., அவர்கள் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு, பயிற்சி முடித்த 274 இரண்டாம் நிலை காவலர்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்கள்.

பின்னர் பயிற்சி முடித்த காவலர்களுக்கிடையே சிறப்புரையாற்றுகையில், இந்த காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், முதன்மை சட்ட போதகர், முதன்மை கவாத்து பயிற்சியாளர், உதவி சட்டப் போதகர்கள், உதவி கவாத்து பயிற்சியாளர்கள், கைரேகை நிபுணர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற காவல் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முறையில் பயிற்சியளித்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் நிகழ்ச்சியை காணவந்துள்ள காவலர்களின் குடும்பத்தினரையும், மற்றும் பத்திரிக்கை நண்பர்களையும் வரவேற்று, எனது மாலை வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ள நீங்கள் காவல்துறையின் மாண்பையும். பெருமையையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் உங்கள் பணியினை அமைத்துக் கொள்ள வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் உங்கள் பணியிலும், நடத்தையிலும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டிய பணி, கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பணி. சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்த வேண்டிய பணி. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும்.

பொது அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். காவல்துறை பணியில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பணிபுரிய நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை முடிப்பதில் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டு உங்களின் முழுத் திறமையையும் வெளிக் கொணர வேண்டும்.

மேலும் ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இரு கண்களாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவையும், உங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை சுறுசுறுப்புடன் முடிப்பதில் ஆர்வத்தையும் நீங்கள் வெளிக்காட்ட வேண்டும். இந்திய நாட்டிலேயே முதன்மையான காவல்துறையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் புதிய அரண்களாக, படை வீரர்களாக உங்களை இணைந்து கொண்டு புதியதோர் வெற்றிப் பயணத்தை தொடங்க உங்கள் அனைவரையும் மனமார வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் திரு.K.சுரேஷ்குமார், தலைமையிடம், திரு.V.அன்பு, வடக்கு சரகம், திருமதி.B.ஸ்ரீதேவி தெற்கு சரகம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.