பைக் – லாரி மோதல் ஒருவர் பலி
.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் 48 வயதான ராதாகிருஷ்ணன். இவர் ஆமூரிலிருந்து திருச்சி நோக்கி தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது துறையூர் பகுதியில் உள்ள திருச்சி சேலம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்புறம் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். இந்நிலையில் எதிரே திருச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த டாரஸ் லாரி மீது மோட்டார் பைக் மோதி விபத்தில் தலை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது் விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்