அய்யாறு ஆற்றில் மண் சரிவை சீரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் அய்யாறு ஆற்றில் கொல்லிமலை மற்றும் பச்சைமலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து குணசீலம் கிராமத்தில் உள்ள ஆற்றின் வலது கரையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன் வட்டாட்சியர் சண்முகப்பிரியா, நீர்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.