அக்னிபாத், அக்னிவீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி திருச்சி வருகை

0 306
Stalin trichy visit

அக்னி பாத் மற்றும் அக்னி வீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளும் மோட்டார் சைக்கிள் பேரணி இன்று திருச்சி வந்தடைந்தது

இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75 வருட டைமண்ட் ஜூப்ளி விழாவை கொண்டாடும் வகையிலும் – அக்னி பாத் மற்றும் அக்னி வீர் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக செகந்திராபாத் வரை சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர்.

அந்த வகையில் இன்று காலை திருச்சிக்கு வருகை தந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் குழுவை கருடா கேட்ட அருகே திருச்சி லெப்டினண்ட் கர்னல் அஜய் குமார் தலைமையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கணேசன் கண்காணிப்பாளர் மற்றும் சுபேதார் சதாசிவன் ஆகியோர் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.