பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

0 329
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கோவிலடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணி சேகர்.இவருடைய மகன் 22 வயதான ராகவேந்திரன். இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு ராஜ குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான பொன் பாபா பாண்டியன் பின்னால் லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அய்யன் வாய்க்கால் பாலத்தில் முன்னாள் சென்ற பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராகவேந்திரன் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.