ஒற்றுமை தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை

0 270
Stalin trichy visit

இந்திய திருநாட்டின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை தினமாக கடைப்பிடித்து இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்திய நாட்டின் ஒற்றுமை தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் வளாகத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கோட்பாட்டை கொண்ட நாம் அனைவரும் எப்போதும் இந்திய திருநாட்டின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருப்போம் என்று ரயில்வே பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ரயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார் – திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.