திருச்சி மாவட்டம் முசிறி அருகே காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று சிவாலயத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவிற்கு பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்திருந்து கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
