1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தியவர் கைது
திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி திரு சுதர்சன் அவர்கள் அறிவுறுத்தலின்படி கடந்த 31.10.2022 ம் தேதி திருச்சி காவல் ஆய்வாளர் திரு கோபிநாத் தலைமையில் லால்குடி பகுதியில் ரோந்து சென்று கண்காணித்த போது கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லக்குடி அருகே மால்வாய் செல்லும் சாலையில் உள்ள பழைய பயன்பாடற்ற கட்டிடம் அருகே வெள்ளை நிற மூட்டைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை விசாரணை செய்ய அது ரேஷன் அரிசி என தெரிய வந்தது. அந்த மூட்டைகளை கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த கள்ளகுடி மேலரசூரை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்து விசாரித்ததில் சுமார் 20 மூட்டைகளில் 50
கிலோ வீதம் சுமார் 1000 கிலோ அரிசி கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. கள்ளத்தனமாக வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.