பள்ளி வாசல் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அஜ்மல் அன்சாருல் முஸ்லிமின் பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் முகமது நயினார் என்பவர் பள்ளிவாசலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 4.30 மணி அளவில் பள்ளிவாசலை திறப்பதற்காக வந்தபோது பள்ளிவாசலின் கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரி அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை என்ன நிபுணர்களுடன் இணைந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் பள்ளிவாசலுக்குள் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான ஆம்ப்ளிபையர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.