இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசிடம் மத்திய பல்கலைக்கழகங்களில் இனி இந்தி தான் பயிற்று மொழியா?, அரசு தேர்வுகளில் ஆங்கிலத்தை ஒழித்து இந்திக்கு மட்டும் முன்னுரிமையா? என்ற கேள்விகளை முன்வைத்து கண்டனம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.