அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் : முன்பதிவு செய்ய அழைப்பு
திருச்சியில் கே. என். நேரு பிறந்தநாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.
5 மற்றும் 6 தேதிகளில் நடைபெறுகிறது.
திருச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பிறந்த நாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் முகாம் கட்சி நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் வரும் 5. 11 .22, மற்றும் 6. 11. 22 ஆகிய தேதிகளில் திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் காலை 7 மணி முதல் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் .நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ளது முகாமில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இதய மின்சுருள் படம், விழித்திரை பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட உள்ளது.
முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து நீரழிவு நோயாளிகளுக்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கும் கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8610447062, 9087149459, 7358643088 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.