திருச்சி தெற்கு மாவட்டத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் :அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 307
Stalin trichy visit

தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துக்களுடன், திருச்சி தெற்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகளின் ஆதரவோடு மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பேற்ற பின் நிர்வாகிகளை அறிமுகப்படுத்துகின்ற முதல் பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 06.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு திருச்சி இ.பி. ரோடு ஆனந்தா அவென்யூ, சந்தான வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகின்றது.இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சிறப்புரையாற்றுகின்றார்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

.கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு தலைமை கழகத்தின் கட்டளையை தொடர்ந்து செயல்படுத்துவோம் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.