தொட்டியம் அருகே புதிய நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
தொட்டியம் அருகே 28 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 4.51 கோடி மதிப்பில் புதிய நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை – எம்எல்ஏ பங்கேற்பு.
தொட்டியம் அருகே புதிய குடிநீர் தொட்டி அமைத்திட நடைபெற்ற பூமி பூஜை விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
தொட்டியம் அருகே ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாளையம் புதூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் 4. 51 கோடி செலவில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 28 கிராமங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க பெறும். மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திமுக ஒன்றிய செயலாளர் திருஞானம், தங்கவேல், ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி,துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, நகர செயலாளர் செல்வராஜ்,
காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.