165 ஆயுதப்படை காவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் 165 நபர்களுக்கு இன்று ஆயுதப்படையில் இருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க கலந்தாய்வு நடைபெற்றது. 165 காவலர்களுக்கும் அவரவர் வேண்டிய இடங்களுக்கு காலி பணியிடங்களின் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. பணியிட மாறுதலுக்கான ஆணை இன்று அல்லது நாளை வெளியிடப்படும். புதிதாக பயிற்சி முடித்து பணிக்கு காவலர்கள் சேர உள்ள நிலையில் காலி பணியிடங்களின் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆயுதப் படைக்கு ஏற்கனவே உள்ள காலியிடங்கள் 120 மற்றும் தற்போது 165 சேர்த்து 285 நபர்கள் புதிதாக திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு பணி நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பிறப்பிப்பார்கள் என்று தெரிய வருகிறது.