செல்போன் திருடிய இளம் பெண் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் செல்போனை திருடிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் 24 வயதான திவாகர். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது விலையுயர்ந் செல்போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஒடுக்கன்சேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 22 வயதான ஆனந்தி செல்போனை திருடி சென்றுள்ளார். செல்போன் மாயமானது கண்டு திவாகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரி பேரில் விசாரணை செய்த சமயபுரம் போலீசார் ஆனந்தி செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்மிடத்தக்கது.