தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டம்

0 305
Stalin trichy visit

மாண்புமிகு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க  பொதுக்கூட்ட ம் சின்னக்கடை வீதி சறுக்குப்பாறையில் இன்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும்,  மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சருமான சி.சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,  பள்ளி கல்வித்துறை அமைச்சருமான   அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், குணசேகரன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், தர்மராஜ். நீலமேகம்,  விஜயகுமார், ராஜ்.முஹம்மத், மணிவேல் , சிவா, சந்திரமோகன், இளங்கோ, சரவணகுமார் ஆகியோரும் பகுதி கழக, ஒன்றிய கழக செயலாளர்களும், நிர்வாகிகளும், அணி அமைப்பாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.