வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

0 252
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஊரான் அடிகளார் தெருவில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சமயபுரத்தில் உள்ள ஊரான் அடிகளார் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ச கண்ணனூர் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார் .இவர் வீட்டில் இன்று 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது.பாம்பை கண்டதும் குடும்பத்தினர் பயத்தில் வெளியே ஓடிவந்தனர். இது குறித்து சரவணன் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி பொறுப்பு தலைமையில் வீரர்கள் பிரான்சிஸ் அலெக்சாண்டர், சதீஷ்குமார், கார்த்திக், தர்மராஜா சபாபதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் மீட்டு அங்குள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.