மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலையினை சீரமைக்கும் பணிகளையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலையினை சீரமைக்கும் பணிகளையும், காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் கொட்டும் மழையிலும் ஜல்லி கொட்டி சீரமைக்கும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்த போது A.S.V.Construction பாபு மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.