அமைச்சர் கே.என் நேருவின் 70-வது பிறந்தநாள் விழா -கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

0 459
Stalin trichy visit

 

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தனது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதனைத் தொடர்ந்து ஏராளமான கழகத் தொண்டர்கள் அமைச்சர் கே என் நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பொன்னாடை வழங்கினார்கள்.. மேலும் திருச்சி மாநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம், விழி இழந்தோர் பள்ளி, ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கினர்…

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,பழனியாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே.என்.நேருவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்..

Leave A Reply

Your email address will not be published.