அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் முகாம்
முசிறி அருகே அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி என் எஸ் எஸ் மாணவிகள் சார்பில் வெள்ளூர் பகுதியில் நாட்டு நல பணி திட்ட முகாம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியை மீரா முகாமினை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மதியழகன் லாவண்யா வாழ்த்தி பேசினர். முகாமில் வெள்ளூர்
திருகாமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வெள்ளூர் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் மாணவிகள் சுத்தம் செய்தனர்.வெள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரம் வளர்ப்பதின் அவசியத்தை மாணவர்கள் எடுத்துரைத்து
மர கன்றுகள் நட்டனர்.திருச்சி எஸ் ஆர் எம் கல்லூரியுடன் இணைந்து பகுதியில் கண் மருத்துவ முகாம் .மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடத்தபட்டது. இறுதியில் ஆசிரியை கௌரி நன்றி கூறினார். முகாமில் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர்.