என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 293
Stalin trichy visit

திருச்சி, நவ.17 திருச்சி மாநகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி 27 ஆவது வார்டு சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பேசுகையில், மக்கும், மக்காத குப்பைகள் குறித்தும், தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்க கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, புத்தூர் கிளை நூலக நூலகர் புகழேந்தி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சமூக ஆர்வலர் கீர்த்தனா பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.