பூனாம்பாளையம் அடர்வனக்காடுகள் 3 ஆம் ஆண்டு தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 341
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பூனாம்பாளையம் ஊராட்சியில் 4.25 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அமைக்கப்பட்ட மியாவாக்கி எனும் அடர்வனக் காடுகள் 2 ஆண்டு நிறைவடைந்து 3ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்இன்று (17.11.2022) நேரில் பார்வையிட்டு சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள், மியாவாக்கி பணிதளப் பொறுப்பாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் திரு.சு.தேவநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.வைத்தியநாதன், ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ரெ.ஸ்ரீதர், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.கலைச்செல்வி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.