தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

0 268
Stalin trichy visit

 

காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்
தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கான சீருடை வழங்கி பேசியதாவது, தூய்மை பணியாளர்கள் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேரூராட்சி பகுதிகள், பொதுஇடங்களை மிகவும் தூய்மையாக வைத்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் மூலம் தினசரி முறையாக வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து பெற்று வளம் மீட்பு பூங்காவில் உரமாக மாற்றம்
செய்யப்பட்டு காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றவட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் இயற்கை உரம், மண்புழு உரம், மண்புழு குளியல் நீர், மீன் அமிலம், காட் ரோஸ் பவுடர் மற்றம் காட்பவுடர் ஆகியவை தயார் செய்யப்பட்டு வருவது மிகவும் சிறப்பாக உள்ளது. காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னுதாரனமாக பேரூராட்சியாக திகழ்வது பாராட்டுக்கு உரியது என பேசினார்..
செயல் அலுவலர் சாகுல்அமீது பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலகபணியாளர்கள் முசிறி சட்டமன்ற உறுப்பினருக்கு நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கினார்கள்.
காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மற்றும் துணைத்தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தினர். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன், மணிவேல், விஜயா, ராஜ்குமார், தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.