ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம்: எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்
திருநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூபாய் 5.52 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருநகர் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ. 5.52 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.5.52 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக இந்த சமையல் கூடத்தை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார் இதனை தொடர்ந்து பள்ளி மாணவ செல்வங்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய பெருந்துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், ஊராட்சி செயலாளர்கள் வார்டு கழக செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள் இளைஞர் அணியினர்,தகவல் தொழில்நுட்ப அணியினர் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.