புகார்கள் மீது துரிதநடவடிக்கை : முசிறி துணைக்காணிப்பாளரை பாராட்டிய முதலமைச்சர்

0 405
Stalin trichy visit

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் திருச்  மாவட்டம், முசிறி உட்கோட்டம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், முசிறி துணைக்காவல் கண்காணிப்பாளர் செல்வி யாஸ்மின், அவர்களை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்த  முதலமைச்சர்

மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர்அவர்களின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுஜித்குமார், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாவட்டத்தில் இருக்கும் முசிறி உட்கோட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து புகார்கள் தொடர்பாக 97% தீர்வு கண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக இன்று 02.12.2022 முசிறி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வி யாஸ்மின் அவர்களை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.