சோழமாதேவி கீழக்குறிச்சி இணைப்பு சாலை பாலத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சோழமாதேவி கீழக்குறிச்சி இணைப்பு சாலை உய்யகொண்டான் வாய்க்கால் குறுக்கு பாலத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் திரு.கங்காதரன், ஒன்றிய தலைவர் திருமதி.சத்யா கோவிந்தராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. அபிராமி, ஆகியோரும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகளும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.