மின் மயானத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அடிக்கல் நாட்டினார்

0 294
Stalin trichy visit

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் , திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் புதிய மின் மயானத்திற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.2 கோடி திட்ட மதிப்பில் மின் மயான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் தேவநாதன், சங்கர ஜோதி ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ், நவல்பட்டு சண்முகம் ஆகியோரும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகளும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.