திருச்சியில் நான்கு பெண்கள் மாயம்

0 946
Stalin trichy visit

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர். இவரது மகள் காஜல் (வயது 16). இவர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜெய்சங்கர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கா நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ். இவரது மகள் புவனேஸ்வரி (20)வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் சீதாலட்சுமி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த அப்துல் சலாம். இவரது மகள் மெஹராஜ் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அப்துல் சலாம் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லாசா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15) இவர் நர்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். இவரும் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை அப்துல்லா ஷா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி மாநகரில் 4 இளம் பெண்கள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.