கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 316
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பாப்பாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் 27 வயதான கோபி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புனித வள்ளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மண்ணச்சநல்லூரில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோபி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கவனித்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து தகலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.