சமயபுரம் போலீசாருக்கு ரோந்து மோட்டார் பைக்

0 274
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி,கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளால் காயம் அடையும் நபர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி அவர்கள் உயிர்களை காக்கும் வகையிலும் தனியாக இரண்டு ரோந்து போலீசாரை நியமித்து அவர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரனுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதை தொடர்ந்து சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை இரண்டாக பிரித்து 24 மணி நேரமும் சூழ்ச்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட இரண்டு போலீசாரை நியமித்து அவர்களுக்கு மோட்டார் சைக்கிளை சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் வழங்கினார்.மேலும் எந்த இடத்தில் எந்த நேரத்திலும் குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பயமின்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.