தொழிலில் நஷ்டம் பெண் தூக்கிட்டு தற்கொலை

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி் பத்மபிரியா(36). இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த 6 மாதமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த பத்மபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.