தி.மு.க. முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ், இளங்கோ, போட்டோ கமால், நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…