வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்த அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

0 412
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ஜே ஜே நகரில் வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர்.

லால்குடி ஜே.ஜே.நகரில் வசிப்பவர் பிரேமலதா. இவரது வீட்டின் படுக்கை அறைக்குள் ஆறடி நீளம் உள்ள சாரை பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் வெளியே ஓடிவந்தனர். இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, சுரேஷ், விஜய் அமிர்தராஜ், சண்முகம், பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.