மனைவியை காணவில்லை : கணவர் புகார்

0 369
Stalin trichy visit

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (20) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் பாரதிதாசன் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோன்று திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் இந்திரா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மீனா (18) இவர் பொன்மலையில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவி மீனாவை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.