விவசாயத்திற்கான ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய கோரிக்கை
திருச்சி: விவசாயத்திற்கான உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றிற்கான ஜி.எஸ்.டி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 19 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.