தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

0 293
Stalin trichy visit

திருச்சி, டிச. 22  பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் கடந்த 25.11.22-ந்தேதி தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாலக்கரையை சேர்ந்த  மணிகண்டன் (24) மற்றும் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த   கொழுப்பு பாரதி @ பாரதிதாசன்  (23) ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி மணிகண்டன் மீது கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்ததாக 2 வழக்குகளும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகளும், வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியதாக 2 உட்பட 11 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

மேலும் விசாரணையில்  கொழுப்பு பாரதி @ பாரதிதாசன் மீது கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தாக 3 வழக்குகளும், பெண்கள் அணிந்திருந்த தங்கசெயினை பறித்து சென்றதாக 3 வழக்குகளும், இருசக்கர வாகனத்தை திருடியதாக 2 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்தததாக 1 வழக்கு உட்பட 12 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, மணிகண்டன் மற்றும் கொழுப்பு பாரதி @ பாரதிதாசன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர ஆணையர் G.கார்த்திகேயன்  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான காவல் ஆணையர்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.