முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருச்சி, டிச. 23 திருச்சி மாநகராட்சி மன்னார்புரம், செங்குளம் காலனி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை அரசு முதன்மை செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) பி.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்-குநர் திவ்யதர்சினி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் காலை உணவருந்தி கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணைர் வைத்திநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.