குண்டுகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
நம்புக்குறிச்சியில் அனுமதியின்றி குண்டுகல் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நம்புக்குறிச்சி பிரிவு சாலையில் அனுமதியின்றி குண்டுகள் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நம்புக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி குண்டுகல் டாரஸ் டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டு வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் நெய்க்குளம் நம்புக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது நம்புக்குறிச்சி பிரிவு சாலையில் வந்த டாரஸ் டிப்பர் லாரியை சோதனை செய்தில் அதில் அனுமதியின்றி 7 யூனிட். குண்டுகல் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து டாரஸ் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.