வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

0 403
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 3/4 பவுன் நகை, ரூ. 15,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள எம்ஜிஆர் நகர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் 56 வயதான மல்லிகா. இவர் கடந்த 17 ம் தேதி மாலை 4 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு திருவானைக்காவலில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் பக்கத்தில் இருந்தவர்கள் கடந்த 21 ம் தேதி மல்லிகாவிற்கு வீடு திறந்து கிடப்பதாக தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அன்று மாலை 5 மணி அளவில் திருவெள்ளறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 3/4 பவுன் நகை மற்றும் ரூ. 15,000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து மல்லிகா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து நகைப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.