மாநில அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு பாராட்டு

0 337
Stalin trichy visit

திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜராஜன் என்பவர் கடந்த 17.12.2022 & 18.12.2022ந்தேதி சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் பங்கேற்று குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் நடப்பாண்டில் மதுரை நாகமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியிலும், கோயம்முத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியிலும் மற்றும் காவல் துறையினருக்கு இடையிலான மாநில அளவிலான தடகள போட்டியிலும் மாஸ்டர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.

மேற்படி காவலரை திருச்சி மாநகரம் கே.கே.நகர் சரகத்தின் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார்பாராட்டி சிறப்பித்தும், சக காவலர்களும் காவல்துறையில் பணிசுமைக்கு மத்தியில் விளையாட்டிலும் முக்கியத்துவம் கொடுத்து உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்று அறிவுரை வழங்கியது காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.