ஆண்கள், பெண்களுக்கு கபாடி போட்டி- முதல் பரிசு ஒரு லட்சம்
தொட்டியம் அருகே ஆண்கள், பெண்களுக்கு கபாடி போட்டி- முதல் பரிசு ஒரு லட்சம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆண்கள், பெண்களுக்கான கபாடி போட்டி துவக்கவிழா நடைபெற்றது.
போட்டிகளை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முரளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் முன்னிலை வைத்தனர்.
கபாடி போட்டியில் திருச்சி நாமக்கல் மதுரை கோவை, கரூர் , சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.ஆண்கள் பிரிவு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும், பெண்களுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 25 ஆயிரம்ரூபாயும் அறிவிக்கப்
பட்டுள்ளது.ஆடுகளம் ரப்பர் மேட் கொண்டும்,பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு கேலரியும்,
மின்னொழியும் அமைக்கபட்டுள்ளது. நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மகன் தொழிலதிபர் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த கபாடி போட்டியினை காடுவெட்டியார் பேரவை மற்றும் திமுக இளைஞர் அணியினர் செய்துள்ளனர்.