சாலை விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

0 342
Stalin trichy visit

சாலை விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி பிரிவு திட்ட இயக்குநா் ப. நரசிம்மன் தெரிவித்தாா்.

சாலை விபத்துகளை தடுப்பதற்காக சாலைப் பொறியியல் குறித்த பயிற்சி வகுப்பு காவல்துறையினருக்காக திருச்சியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலாமணி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா் ப. நரசிம்மன் மேலும் பேசியது: சாலை விபத்துகளே நமது சமுதாயத்துக்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

அதிகளவிலான உயிரிழப்புகளும் சாலை விபத்துகள் மூலமாகவே நிகழ்கின்றன. விபத்து அதிகமாக நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீா்வுகள் காணும் வகையில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுநா் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது நமது உயிா் பாதுகாப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சாலை விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்துக் காவல்துறையினா் பணி செய்கின்றனா். நெடுஞ்சாலைத்துறையும் துணை நிற்கிறது. பொது மக்களும் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா். இந்தப் பயிற்சி வகுப்பில், காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல்நிலைக் கவாலா்கள் 40 போ பயிற்சி பெற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.