இலவச ஆம்புலன்ஸ் சேவை : சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் தீர்மானம்
முசிறி, டிச,26 முசிறியில் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சட்ட ஆலோசகர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் செயல் தலைவர் டாக்டர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், வழிகாட்டி ராஜா, மோகன்ராஜ், உள்ளிட்ட பலர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து விரிவாக பேசினர்.
கூட்டத்தில் முசிறி நகரமக்களுக்கு சங்கத்தின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுப்பது,
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது,
முசிறி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சென்டர் அமைத்திட கேட்டுக் கொள்வது,
முசிறி காவிரி ஆற்று கரையோரங்களில் வறட்சி காலத்தில் அழிந்து போன மரங்களை மீட்டெடுக்கும் வகையில் மா, தென்னை, நாவல் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நட்டு வளர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறையை கேட்டுக் கொள்வது,
மற்றும் சங்கம் தொடர்பான வளர்ச்சி குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.