முசிறியில் சோழிய வெள்ளாளர் சங்கம் கூட்டம்

0 769
Stalin trichy visit

 

முசிறி,டிச.26- திருச்சி மாவட்டம் முசிறி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழிய வெள்ளாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டாக்டர் வி.ஜே.செந்தில்குமார் தலைமை வகித்தார். தொட்டியம் தியாகராஜன், மருதை வழக்கறிஞர், அசோக்குமார், முசிறி முருகன், வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி மாவட்ட சோழிய வெள்ளாளர் சங்கத்தின் இடமிருந்து முசிறிக்கு ஆம்புலன்ஸ் வசதி, முக்கிய பகுதிகளில் சங்க கொடி ஏற்றுதல், உள் நுழைவு எல்லைகளில் சங்கப் பெயர் பலகை அமைத்தல், கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தல், இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் அமைத்து தருதல், இன சொந்தங்களுக்கிடையே மையப் பகுதியான முசிறியில் ஜாதக பரிவர்த்தனை மையம் அமைத்தல் மற்றும் முசிறியில் ஒன்றிய மாநாடு நடத்துவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொறுப்பாளர்கள் வழிகாட்டி ராஜா, வெங்கடேசன், விவேகானந்தன், மோகன்ராஜ் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பாலசுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.