முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 354
Stalin trichy visit

திருச்சி, டிச. 27 தமிழ்நாடு முதலமைச்சர் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மொண்டிப்பட்டி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாட்சிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், சவுந்தரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.