சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து
திருச்சி , டிச 28. திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம், கல்லுபட்டி தேசிய நெடுஞ்சாலை பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மதுரை- திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது கல்லுப்பட்டியில் எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை பாலம் வேலை கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாற்றுப்பாதை சாலையில் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது , லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு ஆம்புலன்ஸில் திருச்சி மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.