ரூ. 655 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 436
Stalin trichy visit

திருச்சி,டிச. 29 திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தெடர்ந்து திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5639 புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டலான 5951 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கி மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,  அமைச்சர் தங்கம் தென்னரசுமேயர் மு.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.