சக காவலர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய டி.எஸ்.பி…
திருச்சி மாவட்டம் முசிறியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிஎஸ்பி யாஸ்மின் சக காவலர்கள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முசிறி கைகாட்டியில் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் புத்தாண்டை கொண்டாடினர். பொதுமக்கள் காவலர்களுக்கு கேக் ஊட்டி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர. இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கருணாநிதி, SSI சக்தி விநாயகம், SSI வடிவேல், நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் அங்கமுத்து, உதவி ஆய்வாளர் (பயிற்சி) பிரியங்கா, காவலர் முருகானந்தம், பொதுமக்கள், வியாபாரிகள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை கொண்டாடினர்.