வைகுண்ட ஏகாதசி விழா : அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் அலுவலர்களுடன் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் 1ல் இன்று (31.12.2022) மண்புமிகு மேயர் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மண்டலத் தலைவர் திருமதி.ஆண்டாள் ராம்குமார்ஆகியோர் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுசெய்தார்கள்.
ஸ்ரீரங்கம் ஏகாதசி திருவிழாவிற்கு 200 தர்காலிக சிறப்பு தூய்மை பணியாளர்கள் நியதிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்காலிக நவின கழிப்பிடங்கள் 15இடங்களில் கீழ உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, அம்மாமண்டபம்சாலை மலட்டாறு, தேவி தியேட்டர் பஸ் நிறுத்தம், காந்தி ரோடு பதிவாளர் அலுவலகம், ராகவேந்திரபுரம் 3ம் குறுக்குத்தெரு, திம்மராயசமுத்திரம், சாலைரோடு வாகனநிறுத்தம், வடக்கு வாசல் பாலம் அருகில், கீதாபுரம் அம்மாமண்டபம் அருகில், கொள்ளிடம் பஞ்ச்க்ரை வாகனம் நிறுத்தும் இடம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், கீழ அடவளஞ்சான் வீதி மற்றும் 8 இடங்களில் 39 தற்காலிக சிறு கழிப்பிடங்களும் அமைக்கப்படுகின்றன. 4நடமாடும் கழிவறைகளும் தேவையான இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் சுற்று வட்டப்பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கும் திருவிழா நாட்களில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். 6 வாகனம் நிறுத்துமிடங்களில் ஸ்ரீரங்கம் சாலைரோடு, திம்மராயசமுத்திரம்,தெப்பகுளத்தெரு, பஞ்சகரை யாத்ரிவாஸ் எதிரில், கன்னிமார்தோப்பு, சிங்கராயர்கோவில் எதிரில் ஆகிய வாகனம் நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகளும், கூடுதல் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம் கருதி திருவிழா நாட்களில் ஈ ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு மருந்துகள் தேவையான அளவு பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படும், பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எரியாமல் குப்பைதொட்டிகளில் போட வேண்டும் எனவும் மண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், தெரிவித்தார்.
மேலும், 51 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைத்து மாநகராட்சி மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதுடன், பொது மக்கள் நலன் கருதியும் மாநகரை சுகாதாரமாக பராமரித்திடவும் அரசால் தடைசெய்யப்பட்ட 40 மைக்ரான் அளவு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை எவரும் பயன்படுத்த வேண்டாம் எனவும், பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எரியாமல் குப்பைதொட்டிகளில் போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் திரு.கே.பாலசுப்ரமணியன், மண்டலத் தலைவர் திருமதி.ஆண்டாள் ராம்குமார், உதவிஆணையர் திரு.ப.ரவி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.