திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையர் பொறுப்பேற்பு

0 354
Stalin trichy visit

திருச்சி, ஜன.4 திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்களாக ஏற்கெனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 ஆவது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்யபிரியா ஐ.பிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாநகரத்திற்கு முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை சத்யபிரியா ஐ.பி.எஸ் பெற்றுள்ளார்.
இன்று பொறுப்பேற்ற மாநகர காவல் துறை ஆணைய சத்ய பிரியா கூறுகையில். திருச்சி மாநகரத்தில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒலிக்கவும் ரவுடிசத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக கஞ்சா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை ஒழிப்பதற்கு பல புதிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.